சிறு குன்றின் மீது அமைந்துள்ளது. கல்லைக் குடியாக, இருப்பிடமாகக் கொண்டதால் 'கற்குடி' என்ற பெற்றது. 50 அடி உயர பாறைமீது கோயில் அமைந்துள்ளது. மூவராலும் பாடப்பட்ட கோயில்.
இத்தலத்து மூலவர் 'உச்சிநாதர்', 'உஜ்ஜீவனநாதர்', 'கற்பகநாதர்', 'உய்யகொண்டநாதர்' போன்ற திருநாமங்களால் வணங்கப்படுகின்றார். மூலவர் சிறிய லிங்க வடிவத்துடனும், சதுர வடிவ ஆவுடையுடனும் மேற்கு நோக்கி தரிசனம் தருகின்றார். இக்கோயிலில் 'அஞ்சனாட்சி' மற்றும் 'பாலாம்பிகை' என்னும் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன.
ஈழநாட்டு அரசன் ஒருவன் இத்தலத்திற்கு வந்து உச்சிக் காலத்தில் பூஜை செய்து முக்தி பெற்றான். நாரதர், உபமன்யு முனிவர், மார்க்கண்டேயர், கரன் ஆகியோர் வழிபட்ட தலம். பங்குனி மாதம் பிரம்மோற்சவம் நடைபெகிறது.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழால் போற்றிப் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|